தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

737பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே குமரி மடுவு கிராமத்தில் சங்கரின் மகள் பாவதரணி கிணற்றில் தவறி விழுந்து இன்று (நவம்பர் 7) வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பொம்மிடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி