தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் உள்ள மலை குன்றின் மீது அமைந்துள்ள அபய நரசிம்மர் கோயிலில், ஆவணி மாத பிறப்பு வழிபாடு முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் உண்டியலில் இருந்த சுமார் ரூ. 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.