தர்மபுரி: சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

785பார்த்தது
தர்மபுரி: சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ. பள்ளிப்பட்டி சாலையில் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 50க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.