தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே ஏமனூர் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1-ந் தேதி ஆண் யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்டது. இது தொடர்பாக கொங்கரப்பட்டியை சேர்ந்த செந்தில், தினேஷ் ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை வனத்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீடு திரும்பிய அவர் கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. நேற்று மாலை தனது வீட்டு அருகில் புளிய மரத்தில் செல்வம் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏரியூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.