சட்டப்பேரவை தேர்தலில், நடிகர் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். குறிப்பாக, பா.ம.க. முன்னாள் கவுரவத்தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, த.வெ.க. வேட்பாளர் கஜேந்திரனிடம் 27,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பா.ம.க. இத்தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.