தர்மபுரி: ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது

641பார்த்தது
தர்மபுரி: ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மூக்கம்பட்டி ஏரியில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அள்ளியதாக வெங்கடேசன் (42) மற்றும் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை பிற்பகல் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மற்றும் இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி