தருமபுரி மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.