தர்மபுரி: மழை வேண்டி கூத்து கலைஞா்கள் நாடகம் அரங்கேற்றம்

211பார்த்தது
பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் 12 கிராம மக்கள் மழை வேண்டி மஹாபாரத சொற்பொழிவு மற்றும் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது. குத்துக் கலைஞர்கள் கொண்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை. நேற்று இரவு மஹாபாரத சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு தொடங்கிய நாடகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. கூத்துக்கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் தரித்தும் பஞ்சபாண்டவர் வேடம் அணிந்தும் நடித்துக்காட்டினர். இந்த நிகழ்ச்சியை திரளான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி