தர்மபுரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை திருமண தடை விழிப்புணர்வு பிரச்சார பேரணி இன்று வியாழக்கிழமை தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் கொடியசைத்து துவக்கி வைத்தார். தர்மபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். இந்த பேரணி புறநகர் பேருந்து நிலையத்தில் தொடங்கி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.