தர்மபுரி: ஒகேனக்கல்லில் தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி

1பார்த்தது
ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி நடைபெற்றது. இதில் ஓட்டல் உரிமையாளர்கள், தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் திட்ட பாதுகாவலர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சமையல் எரிவாயுவில் ஏற்படும் தீ, குடிசை வீடுகளில் பற்றி எரியும் தீ போன்றவற்றை எப்படி அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.