தர்மபுரி: பொம்மிடியில் ரூ.30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

429பார்த்தது
பொம்மிடியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் வெற்றிலை வாரச்சந்தையில் நேற்று நவ. 06 அன்று ரூ. 30 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. 128 வெற்றிலை கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை ரூ. 4000 முதல் ரூ. 16000 வரை விற்பனையானது. 250-க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த சந்தையில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி