தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில், சேலம் கோட்டத்திற்க்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் சசி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பாஜக ஓபிசி அணி மாநில தலைவர் டாக்டர். வீரதிருநாவுக்கரசு கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் பாஜக ஓபிசி அணி மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.