தர்மபுரி: காரிமங்கலம் அருகே வீட்டு வாசலில் வாலிபர் சடலம்

2பார்த்தது
தர்மபுரி: காரிமங்கலம் அருகே வீட்டு வாசலில் வாலிபர் சடலம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஜொல்லம்பட்டி கிராமத்தில் சரவணன் (32) என்ற இளைஞர் இன்று புதன்கிழமை காலை தனது வீட்டின் முன்பாக ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து காரிமங்கலம் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.