தர்மபுரி சிறப்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நடைபெறும் இடத்தில், மர்ம நபர்கள் நுழைவாயில் சுவரில் 'வெடிகுண்டு உள்ளது' என எழுதி ஒட்டியுள்ளனர். திங்கட்கிழமை காலை நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.