தர்மபுரி அருகே, 15 வயது சிறுமி கட்டிடம் மேஸ்திரி அருண்குமார் (30) என்பவருடன் பழகியதால் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், பாட்டி ஆகியோர் மே 25 அன்று எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது. பென்னாகரம் மகளிர் காவல்துறையினர் அருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.