தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் பரமேஸ்வரன் மற்றும் காவலர் ஆறுமுகம் ஆகியோர் நேற்று புதன்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகராஜ், செண்பகவல்லி, பத்மா ஆகிய மூன்று பேர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 51 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.