தர்மபுரி: நீரின்றி வறண்டு பாறைகளாக காணப்படும் காவிரி ஆறு

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீரற்று காணப்படுகிறது. நேற்று வினாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வினாடிக்கு 300 கன அடியாக சரிந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஒகேனக்கல் காவேரியாறு பாறை திட்டுகளாக வறண்டு காணப்படுகிறது.