தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பிஎஸ் அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பட்டணத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதன்கிழமை நள்ளிரவு தீச்சட்டி எடுத்தல், அம்மன் ரதம் திருவீதி உலா நடைபெற்றது. அம்மன் வேடம் அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழா இன்று வியாழக்கிழமை விடியற்காலை வரை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். வானவேடிக்கைகள் மற்றும் மேளதாளங்களுடன் அம்மன் கோவில் விழா கோலாகலமாக நடைபெற்றது.