தர்மபுரி: பட்டுநூற்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

57பார்த்தது
தர்மபுரி: பட்டுநூற்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்
தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குதல் திட்டத்தின் கீழ், மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டுநூற்பாளர்களில் முதல் 2 இடங்களை பிடித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 25.03.2025 அன்று ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற தருமபுரி மாவட்ட பலமுனை பட்டுநூற்பாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேரில் சந்தித்து, வாழ்த்துப் பெற்றனர்.

 மதிகோண்பாளையம், பட்டுநூற்பாளர் பிரகாஷ் முதல் பரிசாக ரூ.1,00,000/- மற்றும் ராஜகோபால்கவுண்டர் தெரு, பட்டுநூற்பாளர் வேதவள்ளி இரண்டாம் பரிசாக ரூ.75,000/- என ரூ.1,75,000/- ரொக்கப்பரிசுக்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பலமுனை பட்டுநூற்பாளர்களில் மாநில அளவில் சிறந்த இடம் பிடித்து ரொக்கப்பரிசுகள் பெற்ற தருமபுரி மாவட்ட 2 பட்டுநூற்பாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று நேரில் சந்தித்து, சான்றிதழ்களைக் காண்பித்து, வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கே.எஸ்.செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி