தர்மபுரி: வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

1பார்த்தது
தர்மபுரி: வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பெரும்பாலை மற்றும் பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் சரவணன் வியாழக்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உயர் கல்வி படிப்பதற்குத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.