தர்மபுரி: சந்தையில் 3. 80 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனை

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16 அன்று நடைபெற்ற வாரச் சந்தையில், பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நாட்டுக்கோழிகளை விற்கவும் வாங்கவும் வந்திருந்தனர். கோழிகளின் வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து காணப்பட்டது. ரகம் மற்றும் அளவைப் பொறுத்து ரூ. 250 முதல் ரூ. 1000 வரை என, மொத்தம் ரூ. 3.80 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி