தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லில், காவிரி ஆற்றில் சீராக 6500 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் உற்சாகமாக மகிழ்ந்தனர்.