தர்மபுரி: பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்

2பார்த்தது
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்ல தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலே தர்மபுரி பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தொடர்ந்து பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால், காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி