தர்மபுரி: ஒகேனக்கல்லில் களைகட்டிய பயணிகள் கூட்டம்

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த சில நாட்களாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வரை வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே. 31) ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரித்ததாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கலை கட்டியது.

தொடர்புடைய செய்தி