பெரும்பாலை ஆத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோபால் குடும்பத்தினர், நிலத்தகராறு காரணமாக சின்னவாசி குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறி, எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்துள்ளனர். ஜனவரி 16 அன்று ஏற்பட்ட பிரச்சனையில், தங்கள் மீது வைக்கோல்போர் எரித்ததாகப் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இது குறித்து கேட்டபோது எஸ்.ஐ. கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளுவதாக மிரட்டுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.