தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டிஅள்ளி பகுதியில் உள்ள தொடக்க நிலை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பாக, விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை முதல் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.