தர்மபுரி: ஒகேனக்கலில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி

309பார்த்தது
தர்மபுரி: ஒகேனக்கலில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி
தர்மபுரி மாவட்ட சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீன் வறுவல் விற்பனையாளர்களுக்கான சிறப்பு மாற்று வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், மதிப்பு கூட்டிய உண்ணக்கூடிய மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தொப்பையாறு அணை மீன்வள ஆய்வாளர் கோகிலவாணி, ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில், மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், ஏராளமான விற்பனையாளர்கள் கலந்துகொண்டு உணவுப் பாதுகாப்பு குறித்த அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றனர்.
Job Suitcase

Jobs near you