தர்மபுரி: ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ

289பார்த்தது
தர்மபுரி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தர்மபுரி முன்னாள் எம்எல்ஏ பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் வியாழக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி