தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே வேப்பிலை அல்லி கிராமத்தில் முனியப்பன் கோவில் அருகில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆனந்தன், சுரேஷ், விஜயகுமார், விஜி ஆகிய நான்கு பேர் உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வியாழக்கிழமை மாலை ரோந்து பணியின் போது கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.