தர்மபுரி: நல்லம்பள்ளியில் 42 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

1பார்த்தது
நல்லம்பள்ளியில் செவ்வாய் தோறும் நடைபெறும் சிறப்பு வார சந்தையில் இன்று நவ. 18 செவ்வாய்க்கிழமை, கனமழைக்கு மத்தியிலும் விவசாயிகள், வியாபாரிகள் திரளாகக் கலந்துகொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் ஆடுகளை வாங்கவும் விற்கவும் செய்தனர். விடியற்காலை முதல் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வியாபாரிகளின் தகவலின்படி, இன்று நடைபெற்ற சந்தையில் ஆடுகள் ரூ. 4,500 முதல் ரூ. 24,000 வரை விலை போனதுடன், மொத்தம் ரூ. 42 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி