தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம், பி. அக்ரகாரம், நாகதாசம்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, நெருப்பூர், பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை விடியற்காலை வரை கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.