தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புதன்கிழமை விடியற்காலை முதல் பென்னாகரம், நல்லம்பள்ளி, இண்டூர், நத்தஹள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக, மழையுடன் கூடிய குளிர் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகாலை முதலே வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.