நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்களம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, நவம்பர் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று செவ்வாய் கிழமை, யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.