தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் சாமிசெட்டிபட்டி ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த ஏரியின் பாசனத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை கிராம மக்கள் ஒன்றிணைந்து கனரக வாகனங்கள் கொண்டு ஏரியை சுத்தம் செய்யும் பணிக்கு பூமி பூஜை நடத்தினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி எம்எல்ஏ கலந்துகொண்டு, ஊர் பொதுமக்களையும் விவசாயிகளையும் பாராட்டினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.