தர்மபுரி: கொழுந்தியாளை கொன்று புதைத்த நபர் கைது

0பார்த்தது
தர்மபுரி ஓசஅள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பு மாயமானார். கல்லக்கொள்ளை மேடு பகுதியில் ராஜேஸ்வரி அடித்து கொலை செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவலர்கள் அவரது உடலை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்டனர். விசாரணையில், ராஜேஸ்வரியின் அக்கா கணவர் அனுமந்தன், கள்ளக்காதல் தகராறில் ராஜேஸ்வரியைக் கொன்று புதைத்ததாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி