பென்னாகரம் அருகே மோட்டுப்பட்டியைச் சேர்ந்த மனநலம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளா, சனிக்கிழமை அரசு பள்ளி பின்புறம் உள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சத்தியநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் அமுதா அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வலிப்பு நோய் காரணமாக மஞ்சுளா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.