பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பேருந்து நிலையங்களில் பாமக சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 100 நாள் பயணமாக தமிழகம் முழுவதும் சென்றுள்ளதாகவும், தற்போது 107வது நாளாக தர்மபுரியில் இருப்பதாகவும் தெரிவித்தார். மக்கள் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப விரும்புவதாகவும், ஆட்சி மாற்றத்தை அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் இலவசங்களை வேண்டாம் என்றும், கல்வி, வேலைவாய்ப்பு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேளுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.