தர்மபுரி: பட்டதாரி இளம் பெண் மாயம் காவலர்கள் விசாரணை

586பார்த்தது
தர்மபுரி: பட்டதாரி இளம் பெண் மாயம் காவலர்கள் விசாரணை
தர்மபுரி பெரிய குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள், 21 வயதான பி.எஸ்.சி பட்டதாரி, நேற்று முன்தினம் வெளியில் செல்வதாகக் கூறிவிட்டு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை ரவி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டதாரி இளம் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி