பென்னாகரம், ஏரியூர் ஆரல்குந்தி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் சண்முகப்பிரியா (முதலாமாண்டு பொறியியல் மாணவி) கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் தோழிகள் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் நேற்று திங்கட்கிழமை ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.