தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே சக்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் தெய்வகுமார், பாலக்கோடு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை திடீரென வீட்டிலிருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது தந்தை கோவிந்தசாமி நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.