தர்மபுரி: இளம்பெண் மாயம்.. காவலர்கள் விசாரணை

53பார்த்தது
தர்மபுரி: இளம்பெண் மாயம்.. காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மாங்கரை வண்ணாத்திபட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மோனிஷா காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி, மோனிஷாவிற்கு பிறந்த நாள் என்பதால், வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடினர். அன்று இரவும் தம்பதி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோனிஷா, இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் பெருமாள் அளித்த புகாரின் பேரில், காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you