தர்மபுரி: உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

4பார்த்தது
தமிழகத்தில் தூய்மை காவலர்கள் தங்கள் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி இன்று (டிச. 2) செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலை நிறுத்தம் மூலம் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைக்க அவர்கள் முயன்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி