தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவப்பட்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், கிராமத்தின் நடுவே உள்ள சொகுசு பங்களாவில் ஜம்பேரி மீனா தம்பதியினர் 24 மணி நேரமும் Gpay, Phonepay மூலம் மது விற்பனை செய்து வந்துள்ளனர். மது பிரியர்கள் மது வாங்கி செல்லும் வீடியோ இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.