தர்மபுரி: ஒற்றை யானை உலா - பொதுமக்கள் அச்சம்

2பார்த்தது
கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வறட்சி காரணமாக கர்நாடக வனப் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட யானைகள் தமிழகத்தின் ஒகேனக்கல் வனப் பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால், யானைகள் சாலையைக் கடக்கும்போதும், சாலை ஓரங்களில் உள்ள மரக்கிளைகளை உடைத்து உண்பதாலும் அப்பகுதி மக்களும் பயணிகளும் அச்சத்தில் உள்ளனர். திங்கட்கிழமை காலை தர்மபுரி - ஒகேனக்கல் சாலையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று மரக்கிளையை உடைத்து உண்டுவிட்டு உலா வந்ததால் வாகன ஓட்டிகள் பயந்து காணப்பட்டனர். இதனால் வெகு தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி