தர்மபுரி: அபய ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

1பார்த்தது
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட எஸ்வி ரோடு பகுதியில் உள்ள சாலை விநாயகர் திருக்கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ அபய ஆஞ்சநேய சுவாமிக்கு இன்று (நவ. 15) சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் எலுமிச்சம் பழம் மாலை, வெற்றிலை மாலை அணிவித்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. காலை 6 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you