தர்மபுரி: ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டம்

231பார்த்தது
பாப்பாரப்பட்டி அடுத்த சிட்லகாரம்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அதிகாலை கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கலச ஆராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனிதகலச தீர்த்த கலசத்தை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலை மீது சுமந்து சென்று, கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினர். பின்னர், கலசத்தில் இருந்து தெளிக்கப்பட்ட புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி