தருமபுரி ஜோதி மகால் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொறியாளர்கள் வளர்ச்சி மாநில மாநாடு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழக அரசு பொறியாளர் கவுன்சில் அமைத்து தர வேண்டும் என்பது உட்பட 32 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.