தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக காணப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப். 16) திங்கட்கிழமை காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 200 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒகேனக்கல் அருவி பாறை திட்டுக்களாக காட்சியளிக்கிறது. பயணிகள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.