தர்மபுரி: நாட்டுப்புற கலைஞர்களின் முப்பெரும் விழா

257பார்த்தது
தர்மபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி புதிய பேருந்து நிலையம் மூன்றோடு வழியாக சென்று தியாகி சுப்பிரமணி சிவா நினைவிடத்தை அடைந்த இந்த நிகழ்ச்சியில், தவில், நாதஸ்வரம், பம்பை, தாரை, தப்பட்டை, கோலாட்டம், தெருக்கூத்து கலைஞர்கள் பாரம்பரிய வேடம் அணிந்து நடனம் ஆடினர். தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் இசைக் கலைஞர்கள் மற்றும் பம்பை கலைஞர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி