தர்மபுரி: அடிப்படை வசதிகளை செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

4பார்த்தது
பென்னாகரம் அடுத்துள்ள அஞ்சேஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பி அக்ரஹாரம், சின்ன பெரமனூர் கிராமங்களை இணைக்கும் கான்கிரீட் சாலை பயன்பாட்டில் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவு நீர் சாலையில் தேங்குவதாகவும், குடிநீர் வசதி இல்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், நேற்று புதன்கிழமை 14.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், கிராம மக்கள் அதனை தடுத்து நிறுத்தி, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி